இந்நாள்‌ ரட்சிப்புக்‌ கேற்ற நல்‌

இந்நாள்‌ ரட்சிப்புக்‌ கேற்ற நல்‌ நாள்‌,
ஏற்ற நல்‌ நாள்‌, ஏற்ற நல்‌ நாள்‌.

சொன்னார்‌ கிறிஸ்துனக்குக்‌ கிருபையைச்‌ சொரிந்து, - இந்‌

1. சந்தோஷந்தனைச்‌ சொல்ல வந்தேன்‌;-தேவ
சமாதான வார்த்தையைப்‌ பெலனாகத்‌ தந்தேன்‌. - இந்‌

2. வாடித்‌ திகைத்துப்‌ புலம்பாதே;-உன்தன்‌
மனதில்‌ அவிசுவாசம்‌ வைத்துக்‌ கலங்காதே. - இந்‌

3. உலகச்‌ சிநேகம்‌ வெகு கேடு;-அதற்‌
குடந்தைப்‌ படாமல்‌ ஜீவ மார்க்கத்தைத்தேடு. - இந்‌

4. இன்றுன்‌ இரட்சகரிடம்‌ திரும்பு;-அவர்‌
இயற்றும்‌ சம்பூரண ஜீவனை விரும்பு. - இந்‌

5. இனிமேலாகட்டும்‌, என்‌ றெண்ணாதே;-பவ
இச்சைக்‌ குட்பட்டால்‌, திரும்ப ஒண்ணாதே. - இந்‌

6. கிறிஸ்‌ தேசுவை உற்றுப்‌ பாரு;-அவர்‌
கிருபையாய்ச்‌ சிந்தின ரத்தத்தைச்‌ சேரு. - இந்‌

7. பாவங்கள்‌ அறச்‌ சுத்திகரிப்பார்‌,-உனைப்‌
பரிசுத்த வஸ்திரத்தால்‌ அலங்கரிப்பார்‌. - இந்‌

8. மகிமை நிறைந்த கிரீடஞ்‌ சூடி,-நித்திய
வாழ்வை அருள்வார்‌ உனக்கின்பங்‌ கொண்டாடி. - இந்‌

9. ஏசுபெருமானை நீ நம்பு;-அவர்‌
என்றென்றைக்கும்‌ உனக்‌ கிரட்சிப்பின்‌ கொம்பு. - இந்‌

- மறியான்‌ உபதேகியார்‌

Start Downloading Your Apps