இறைவன்‌ நீயே எளியனுக்

இறைவன்‌ நீயே -எளியனுக்‌
கிரங்குவாயே.

மறை விளக்கி இந்நரரை மீட்க,-இம்‌
மானுவேல்‌ எனும்‌ நாமம்‌ மேவியே,
தரையில்‌ வந்தவ தரித்த ஏழைகள்‌
தாதா, ஏசுநாதா, என்‌. - இறை

1. அண்டர்கள்‌' போற்றும்‌ விண்ணோனே-எங்கள்‌
ஆதரவாய்‌ உற்ற கோனே,-நல்ல
தொண்டர்களுக்‌ கருள்‌ புரியும்‌ நன்‌ மனத்‌
தூயா, அன்பர்‌ நேயா, என்‌. - இறை

2. நன்று திகழ்‌! பெரியோனே-திவ்ய
ஞானம்‌ எனும்‌ பெயரோனே,-இயல்‌
அன்றும்‌ இன்றும்‌ ஒன்றுபோல உறும்‌
ஐயா, ஒளிர்‌ மெய்யா, என்‌. - இறை

3. எங்கும்‌ நிறைந்த வல்லோனே,-அன்பர்க்‌
கின்பு செய்கின்ற நல்லோனே,-மிக
இங்கிதமாய்‌ உனை ஏத்தித்‌ தொழ அருள்‌
ஈவாய்‌ க்ருபை ஆவாய்‌; என்‌. - இறை

- ஜாண்‌ பால்மர்‌

Start Downloading Your Apps