கர்த்தாவே! இறங்கும்!

1. கர்த்தாவே! இறங்கும்!
பிரசன்னமாகுமேன்;
மெய்பக்தர் நெஞ்சில் இப்பவும்
வந்தனல் மூட்டுமேன்

பல்லவி

கர்த்தாவே! இறங்கும்!
நற்சீரைத் தாருமேன்;
மா வல்ல க்ரியை செய்யவும்
இந்நேரம் வாருமேன்;

2. கர்த்தாவே! இறங்கும்!
நல் மீட்பர் நாமமும்
மா சுடர்போல் பிரகாசிக்க
பேரன்பைக் காட்டவும்- கர்த்தாவே

3. கர்த்தாவே! இறங்கும்!
இவ்வருள் வேதத்தை
கேட்போரின் நெஞ்சில் பொழியும்
தேவானுக்கிரக்கத்தை - கர்த்தாவே

4. கர்த்தாவே! இறங்கும்!
பேர் நன்மை செய்யுமேன்
விண்மாரி பெய்ய மேன்மையும்
உண்டாகும் உமக்கே - கர்த்தாவே

Start Downloading Your Apps