சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்

சிலுவை கொடி ஏந்தி செல்லுவோம்
இனிமை கவி பாடி வெல்லுவோம்
செல்லுவோம், சொல்லுவோம், வெலலுவோம் (2)

சரணங்கள்

1. காடு மலைகளும் கடந்து செல்லுவோம்
கடின உள்ளங்கள் உருக பாடுவோம் (2)- சிலுவை

2. வேதம் என்னும் மெய் தீபம் ஏற்றியே
பேதையர்க்கு நாம் பாதை காட்டுவோம் - சிலுவை

3. துன்பம் வந்தாலும், தொல்லை நேர்ந்தாலும்
தூயர் சேவையில் பின்னடையோமே (2)- சிலுவை

4. இயேசு ராஜாவின் ராஜ்ஜியம் வளர
இன்ப நாமத்தை எங்கும் கூறுவோம் (2) - சிலுவை

Start Downloading Your Apps