சுத்திகரியாயோ துர்க்குணம்‌ நீங்க

சுத்திகரியாயோ, துர்க்குணம்‌ நீங்க என்னைச்‌
சுத்திகரியாயோ,

சரணங்கள்‌

1. மத்தியஸ்தர்‌ பிரசாதனே, பரிசுத்தாவி எனும்‌ நாதனே,
பக்தி தரும்‌ போதனே, உயர்‌ முக்திதரும்‌ நீதனே! - சுத்‌

2. பெந்தெகொஸ்து முருகிலே, அங்கு வந்தே சீஷரருகிலே,
உந்திய கருணை வாரியே, அருள்‌ தந்திடு நல்‌ உதாரியே! - சுத்‌

3. அந்தகாரம்‌ விலகவே, ஒளி சந்ததமும்‌ இலங்கவே,
சந்தரப்பிரகாசனே, தேவமைந்தர்‌ போற்றும்‌ நல்நேசனே! - சுத்‌

4. சத்திய நெறியில்‌ ஏறவே, நற்பத்தியில்‌ தினம்‌ தேறவே,
புத்தியைத்தரும்‌ ஆவியே, இதயத்தை உன்னருள்‌ மேவியே.- சுத்‌

5. தேவ நல்‌ வர மானவா, எங்கு மேவு மூன்றில்‌ ஒன்றானவா,
பாவ மாசினைப்‌ போக்குவாய்‌, நித்திய சாபம்‌ யாவையும்‌
நீக்குவாய்‌. - சுத்‌

- யோ. பால்மர்‌

Start Downloading Your Apps