மாசில்லாத்‌ தேவ புத்திரன்

மாசில்லாத்‌ தேவ புத்திரன்‌
மானிட னானார்‌, ஜெய! ஜெய!

சரணங்கள்‌

1. ஆசீர்‌ வாதமே!-கன தேசார்‌' நீதமே!-ஒளிர்‌
காசினி மீததி நேசப்‌ பிரகாச விண்‌ வாச கிருபாசன- மாசில்லாத்‌

2. சத்திய வாசகர்‌-சதா-நித்திய தேசிகர்‌-வளர்‌
பெத்லகேம்‌ ஊர்தனிலே கரி சித்துக்‌ கன்னியாஸ்திரி வித்தினில்‌
- மாசில்லாத்‌

3. அந்தரம்‌ பூமியும்‌-அதி-சுந்தர நேமியும்‌ -தினம்‌
ஐந்தொரு நாளினிலே தருமுந்தின மூன்றிலொன்றாகிய
- மாசில்லாத்‌

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps