யேசு நாமமல்லாம்‌ உலகினில்‌

யேசு நாமமல்லாம்‌-உலகினில்‌
வேறு நாமம்‌ இல்லை,-கிறிஸ்து

தேசுலாவிய! கேரூபீம்பணி
திவ்ய வானவர்‌ முனிவர்‌ கண்மணி,
மாசில்லாத மெய்ஞ்ஞான சிகாமணி,
மதிக்கும்‌ சத்திய வேத சிரோமணி - யேசு

சரணங்கள்‌

1. வானமும்‌ புவியும்‌-கதி-ரோன்‌ மதி உடுவும்‌
கானல்‌ வரை கடலும்‌-நர-ரான எவ்வுயிரும்‌
தானே படைத்தருள்‌ ஆதி காரணன்‌,
சர்வ ஜீவ தயாபரா பூரணன்‌,
ஈனர்‌ வாக்குக்‌ கெட்டாத மெய்யாரணன்‌,
இலங்கும்‌ வேத சங்கீத பாராயணன்‌. - யேசு

2. காவிலாத மேவை-செய்‌-தீவினையதனால்‌
பூவின்‌ மாந்தர்‌ படும்‌-துயர்‌-தேவ கோபமற,
பாவிகளைப்‌ பரனோடுற வாக்கப்‌,
பரம எருசலேம்‌ நகர்‌ சேர்க்க,
மேவு மலகை அரணைத்‌ தூளாக்க,
மேதினியில்‌ சமாதானம்‌ உண்டாக்க. - யேசு

3. பண்டு வேதியர்கள்‌-கைக்‌-கொண்ட மாமறையில்‌
விண்ட நாமமல்லாமல்‌-உயர்‌-அண்ட மீதினிலும்‌,
மண்டலத்திலும்‌, ஆழி கீழிலும்‌
மாருதம்‌ செலும்‌ அட்ட திக்கிலும்‌,
தொண்டர்‌ கூக்குரல்‌ எட்டும்‌ தூரத்திலும்‌,
துஷ்டர்‌ வர விரும்பாத இடத்திலும்‌. - யேசு

- ஈசாக்கு பாக்கியநாதன்‌

Start Downloading Your Apps