வேதத்தைத் தியானம் செய்

வேதத்தைத் தியானம் செய்
சேதம் வராதே - என் மனமே

சரணங்கள்

1. பொன்னிலும் மேலான பசும் பொன்னாம்
விண்ணில் நமைச் சேர்க்குமாம்- வேதத்தை

2. தெளி தேனிலும் மதுரமுள்ளதாம்
களிப்புறச் செய்கிறதாம் - வேதத்தை

3. இருபுறமும் கருக்கான பட்டயமாம்
உருக்கிடும் கருவியாம் - வேதத்தை

4. கால்களுக்கேற்ற கர்த்தர் தீபமாம்
பாதைக்கு வெளிச்சமாம் - வேதத்தை

5. குறைகளைக் காட்டும் மறையாம் கண்ணாடி
மலையை உடைக்கும் சம்மட்டி - வேதத்தை

6. அழுக்கை கழுவும் அருள் தண்ணீராம்
அழித்திடும் அக்கினியாம்- வேதத்தை

7. வானத்தைச் சேர்ந்த ஞானப்பாலாம்
பானமே செய்திடலாம் - வேதத்தை

Start Downloading Your Apps