மகனே உன்‌ நெஞ்செனக்குத்‌

மகனே, உன்‌ நெஞ்செனக்குத்‌ தாராயோ?-மோட்ச
வாழ்வைத்‌ தருவேன்‌, இது பாராயோ?

சரணங்கள்‌

1. அகத்தின்‌ அசுத்தமெல்லாம்‌ துடைப்பேனே,-பாவ
அழுக்கை நீக்கி அருள்‌ கொடுப்பேனே, - மகனே

2. உன்‌ பாவம்‌ முற்றும்‌ பறி கரிப்பேனேன-அதை
உண்மையாய்‌ அகற்ற யான்‌ மரித்தேனே. - மகனே

3. பாவம்‌ அனைத்துமே விட்டோடாயோ?-நித்ய
பரகதி வாழ்வை இன்றே தேடாயோ? - மகனே

4. உலக வாழ்வினை விட்டகல்வாயே,-மகா
உவப்பாய்க்‌ கதி ஈவேன்‌; மகிழ்வாயே. - மகனே

5. உன்றன்‌ ஆத்துமத்தை நீ படைப்பாயே,-அதில்‌
ஊக்கமாய்‌ வசிக்க இடம்‌ கொடுப்பாயே. - மகனே

- ச. யோசேப்பு

Start Downloading Your Apps