ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர்.
சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது,
சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர்.
காத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர்.
யூதா புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர்.
இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர்.
செபுலோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.
யோசேப்பின் குமாரரில் எப்பிராயீம் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர்.
மனாசே புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
பென்யமீன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்து நானூறுபேர்.
தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர்.
ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர்.
நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது,
நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர்.
எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள்.
இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும்,