Total Matches: 31082

2 இராஜாக்கள் 25:27

யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி,

2 இராஜாக்கள் 25:28

அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்த ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து,

2 இராஜாக்கள் 25:29

அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான்.

2 இராஜாக்கள் 25:30

அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் கொடுக்கப்பட்டுவந்தது.

1 நாளாகமம் 1:1

ஆதாம், சேத், ஏனோஸ்,

1 நாளாகமம் 1:2

கேனான், மகலாலெயேல், யாரேத்,

1 நாளாகமம் 1:3

ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு,

1 நாளாகமம் 1:4

நோவா, சேம், காம், யாப்பேத்.

1 நாளாகமம் 1:5

யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:6

கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.

1 நாளாகமம் 1:7

யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:8

காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:9

கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:10

கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.

1 நாளாகமம் 1:11

மிஸ்ராயீம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,

1 நாளாகமம் 1:12

பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.

1 நாளாகமம் 1:13

கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,

1 நாளாகமம் 1:14

எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,

1 நாளாகமம் 1:15

ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,

1 நாளாகமம் 1:16

அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.

1 நாளாகமம் 1:17

சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.

1 நாளாகமம் 1:18

அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான்.

1 நாளாகமம் 1:19

ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.

1 நாளாகமம் 1:20

யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,

1 நாளாகமம் 1:21

அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,

Start Downloading Your Apps