ஒரு மருந்தரும்‌ குருமருந்‌

ஒரு மருந்தரும்‌ குருமருந்‌-(து)
உம்பரத்தில்‌ கண்டேனே.

அருள மருநதுடன ஆனநத மருநது,
ஆதியிற்றனாய்‌ முளைத்த மருந்து,
வரும்‌ வினைகளை மாற்றும்‌ மருந்து
வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. - ஒரு

சரணங்கள்‌

1, சிங்கார வனத்தில்‌ செழித்த மருந்து,
ஜீவதரு மீதில்‌ படர்ந்த மருந்து,
மங்கை ஏவை பவம்‌ மாற்றும்‌ மருந்து
வல்ல சர்ப்ப விஷம்‌ மாய்த்த மருந்து. - ஒரு

2. மோசே முதல்‌ முன்னோர்‌ காணா மருந்து,
மோட்ச மகிமையைக்‌ காட்டும்‌ மருந்து,
தேசத்தோர்‌ பிணியைத்‌ தீர்த்த மருந்து,
தீர்க்கத்‌ தரிசிகள்‌ செப்பிய மருந்து. - ஒரு

3. தீராத குஷ்டத்தைத்‌ தீர்த்த மருந்து,
செவிடு, குருடூமை தின்ற மருந்து,
மானா' திருத்துவ மான மருந்து,
மனுவாய்‌ உலகினில்‌ வந்த மருந்து. - ஒரு

4. செத்தோரை உயிரோ டெழுப்பும்‌ மருந்து,
ஜீவன்‌ தவறா தருளும்‌ மருந்து,
பத்தரைச்‌ சுத்திகரித்திடும்‌ மருந்து,
பரம வாழ்வினில்‌ சேர்க்கும்‌ மருந்து. - ஒரு

யோ. பால்மர்‌

Start Downloading Your Apps