ஆத்மமே உன் ஆண்டவரின்

ஆத்மமே, உன்‌ ஆண்‌டவரின்‌
திருப்பாதம்‌ பணிந்து,
மீட்பு, சுகம்‌, ஜீவன்‌, அருன்‌
பெற்றதாலே துதித்து
அல்லேலூயா, என்றென்றைக்கும்‌
நித்திய நாதரைப்‌ போற்று.

2. நம்‌ பிதாக்கள்‌ தாழ்வில்‌ பெற்ற
தயை நண்மைக்காய்த்‌ துதி;
கோபங்‌ கொண்டும்‌ அருள்‌ ஈயும்‌
என்றும்‌ மாறாதோர்‌ துதி;
அல்லேலூயா, அவர்‌ உண்மை
மா மகிமையாம்‌, துதி.

3. தந்தைபோல்‌ மாதயை உள்ளோர்‌
நீச மண்ணோர்‌ நம்மையே
அன்பின்‌ கரம்கொண்டு தாங்கி
மாற்றார்‌ வீழ்த்திக்‌ காப்பாரே;
அல்லேலூயா, இன்னும்‌ அவர்‌
அருள்‌ விரிவானதே.

4. என்றும்‌ நிண்றவர்‌ சமூகம்‌
போற்றும்‌ தூதர்‌ கூட்டமே;
நாற்றிசையும்‌ நின்றெழுந்து
பணிவீர்‌ நீர்‌ பக்தரே;
அல்லேலூயா, அனைவோரும்‌
அன்பின்‌ தெய்வம்‌ போற்றுமே.

Start Downloading Your Apps