குருசினில்‌ தொங்கியே குருதியும்‌

குருசினில்‌ தொங்கியே குருதியும்‌ வடிய,
கொல்கதா மலைதனிலே-நம்‌
குருவேசு சுவாமி கொடுந்‌ துயர்‌, பாவி,
கொள்ளாய்‌ கண்‌ கொண்டு.

சரணங்கள்‌

1. சிரசினில்‌ முண்முடி உறுத்திட, அறைந்தே
சிலுவையில்‌ சேர்த்தையோ -தீயர்‌
திருக்கரங்‌ கால்களில்‌ ஆணிகளடித்தார்‌,
சேனைத்திரள்‌ சூழ. - குருசினில்‌

2. பாதகர்‌ நடுவில்‌ பாவியினேசன்‌
பாதகன்போல்‌ தொங்க,-யூத
பாதகர்‌ பரிகாசங்கள்‌ பண்ணிப்‌
படுத்திய கொடுமைதனை. - குருசினில்‌

3. சந்திரசூரிய சகல வான்‌ சேனைகள்‌
சகியாமல்‌, நாணுதையோ!-தேவ
சுந்தர மைந்த னுயிர்‌ விடுகாட்சியால்‌
துடிக்கா நெஞ்சுண்டோ? - குருசினில்‌

4. ஈட்டியால்‌ சேவகன்‌ எட்டியே குத்த
இறைவன்‌ விலாவதிலே,-அவர்‌
தீட்டிய திட்சைக்‌ குருதியும்‌ ஜலமும்‌
திறந்தூறோடுது, பார்‌; - குருசினில்‌

5. எருசலேம்‌ மாதே, மறுகி நீயழுது
ஏங்கிப்‌ புலம்பலையோ?-நின்‌
எருசலையதிபன்‌ இள மணவாளன்‌
எடுத்த கோல மிதோ? - குருசினில்‌

- க.ச. ஏசடியான்‌

Start Downloading Your Apps