தேவ பிதா என்றன்‌ மேய்ப்பன்‌

தேவ பிதா என்றன்‌ மேய்ப்பன்‌ அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே.

ஆவலதாய்‌ எனைப்‌ பைம்புன்மேல்‌
அவர்‌ மேய்த்‌ தமர்‌ நீர்‌ அருளுகின்றார்‌. - தேவ

சரணங்கள்‌

1. ஆத்துமந்‌ தன்னைக்‌ குளிரப்பண்ணி,
அடியேன்‌ கால்களை நீதி என்னும்‌
நேர்த்தியாம்‌ பாதையில்‌ அவர்‌ நிமித்தம்‌
நிதமும்‌ சுகமாய்‌ நடத்துகின்றார்‌. - தேவ

2. சா நிழல்‌ பள்ளத்‌ திறங்கிடினும்‌,
சற்றும்‌ தீங்குக்‌ கண்டஞ்சேனே;
வானபரன்‌ என்னோடிருப்பார்‌,
வளை தடியும்‌ கோலுமே தேற்றும்‌. - தேவ

3. பகைவர்க்‌ கெதிரே ஒரு பந்தி
பாங்காய்‌ எனக்கென்‌ றேற்படுத்திச்‌,
சுக தயிலம்‌ கொண்டென்‌ தலையைச்‌
சுபமாய்‌ அபிஷேகம்‌ செய்குவார்‌. - தேவ

4. ஆயுள்‌ முழுவதும்‌ என்‌ பாத்ரம்‌
அருளும்‌ நலமுமாய்‌ நிரம்பும்‌,
நேயன்‌ வீட்டினில்‌ சிறப்போடே
நெடுநாள்‌ குடியாய்‌ நிலைத்திருப்பேன்‌. - தேவ

- த. யோசேப்பு

Start Downloading Your Apps