உம் சார்பினில் நடத்தும்

1. உம் சார்பினில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றித் தவறுவோமே,
சந்தேகம் சூழும், துக்கம் மிஞ்சிடும்;
மெய் வழி கிறிஸ்து மூலம் நடத்தும்.

2. சத்தியத்தில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றி கேடு சூழுமே;
வாணாள் சிற்றின்ப மாய்கையால் கெடும்,
சற்றும் நம்பிக்கையற்றே வாடிடும்.

3. சன்மார்க்கத்தில் நடத்தும், தந்தையே;
உம் துணையின்றி வழி காணோமே;
கார்மேகம் மூடி இருள் சூழுவோம்,
உம்மாலே சேதமின்றிச் செல்லுவோம்.

4. விண் ஓய்வுக்கு நடத்தும், தந்தையே;
காடுமேடான பாதை என்றுமே
உம் சித்தம்போலே துன்பம் இன்பமும்
தந்தடியாரை வானோர் ஆக்கிடும்.

Start Downloading Your Apps