கர்த்தாவின் தாசரே

1. கர்த்தாவின் தாசரே,
எக்காளம் ஊதுங்கள்;
சந்தோஷ செய்தியை
எங்கெங்கும் கூறுங்கள்;

சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.

2. எல்லார் முன்பாகவும்
இயேசுவை உயர்த்துங்கள்,
அவரே யாவர்க்கும்,
ரட்சகர் என்னுங்கள்;

சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.

3. மோட்சத்தைப் பாவத்தால்
இழந்த மாந்தரே,
கிறிஸ்துவின் ரத்தத்தால்
மோட்சம் கிடைக்குமே;

சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.

4. பாவம் பிசாசுக்கும்
சிறைப்பட்டோர்களே,
உங்களை ரட்சிக்கும்
மீட்பர் நல் இயேசுவே;

சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.

5. சந்தோஷ செய்தியை
எல்லாரும் கேளுங்கள்,
அன்போடு இயேசுவை
இப்போதே சேருங்கள்;

சிறைப்பட்டோரின் மீட்புக்கு
யூபிலி ஆண்டு வந்தது.

Start Downloading Your Apps