இஸ்திரீயின் வித்தவர்க்கு

1. இஸ்திரீயின் வித்தவர்க்கு
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
கர்த்தராம் இம்மானுவேலே;
ஓசன்னா.

2. அதிசயமானவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்;
ஆலோசனைக் கர்த்தாவுக்கு
ஓசன்னா.

3. வல்ல ஆண்டவருக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
நித்திய பிதாவுக்கென்றும்
ஓசன்னா.

4. சாந்த பிரபு ஆண்டவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்;
சாலேம் ராஜா இயேசுவுக்கு
ஓசன்னா.

5. விடி வெள்ளி, ஈசாய் வேரே
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
கன்னிமரி மைந்தருக்கு
ஓசன்னா.

6. தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா முழக்குவோம்
உன்னதம் முழங்குமெங்கள்
ஓசன்னா.

7. அல்பா ஒமேகாவுக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்;
ஆதியந்த மில்லாதோர்க்கு
ஓசன்னா.

8. தூதர், தூயர் மாசில்லாத
பாலர் யாரும் பாடிடும்
ஓசன்னாவோடெங்கள் நித்திய
ஓசன்னா.

Start Downloading Your Apps