தோத்திரம்‌ செய்வேனே ரட்ச

தோத்திரம்‌ செய்வேனே-ரட்சகனைத்‌
தோத்திரம்‌ செய்வேனே

பாத்திரமாக்க இம்மாத்ரம்‌ கருணைவைத்த
பார்த்திபனை யூதக்‌ கோத்திரனை, என்றும்‌ - தோத்திரம்‌

சரணங்கள்‌

1. அன்னை மரி சுதனை,-புல்‌ மீது
அமிழ்துக்‌ கழுதவனை,
முன்னணை மீதுற்ற சின்னக்‌ குமாரனை,
முன்னுரை நூற்படி, இந்நிலத்‌ துற்றோனை. - தோத்திரம்‌

2. கந்தை பொதிந்தவனை,-வானோர்களும்‌
வந்தடி பணிபவனை,
மந்தையர்க்‌ கானந்த மாட்சியளித்தோனை
வான பரன்‌ என்னும்‌ ஞான குணவானை. - தோத்திரம்‌

3. செம்பொன்‌ னுருவானைத்‌,-தேசிகர்கள்‌
தேடும்‌ குருவானை,
அம்பர மேவிய உம்பர்‌ கணத்தோடு
அன்பு பெற நின்று, பைம்‌ பொன்‌ மலர்‌ தூவி. - தோத்திரம்‌

- தஞ்சை சத்தியநாதன்‌

Start Downloading Your Apps