தந்தை சருவேஸ்பரனே உந்தன்‌

தந்தை சருவேஸ்பரனே, உந்தன்‌ மகன்‌ யேசுவுக்காய்‌
எந்தன்‌ முகம்‌ பார்த்திரங்குவாயே-இம்மாத்ரம்‌ நீயே,

சரணங்கள்‌

1. அந்தமதிலா அகாறி சந்ததமுமே விசாரி,
விந்தை அருள்‌ மேவும்‌ அசரீரி, மெய்ஞ்ஞான வாரி! - தந்தை

2. ஞானபரனே, ஒருத்வ மானமுதலே, திரித்வ
மேன்மை வடிவான மகத்வ மேலான தத்வ! - தந்தை

3. விற்பன விவேக நூலா, அற்புதமான சீலா,
நற்பரம லோக அனுகூலா, நன்மை க்ருபாலா! - தந்தை

4. ஆதிமுதலான நேசா, வேதமறை மீதுலாசா,
பேதகம்‌ இலாத சத்ய வாசா, ஞான ப்ரகாசா! - தந்தை

5. வந்த வினை யாவும்‌ தீரும்‌, நிந்தை அணுகாமல்‌ காரும்‌;
சிந்தை மகிழ்ந்தே, கண்ணாலே பாரும்‌; சீர்பாதம்‌ தாரும்‌!- தந்தை

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps