பாடித்‌ துதி மனமே பரனைக்

பாடித்‌ துதி மனமே; பரனைக்‌ கொண்‌டாடித்‌
துதி தினமே.

நீடித்த காலமதாகப்‌ பரன்‌ எமை
நேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப்‌ - பாடி

சரணங்கள்‌

1. தீர்க்கதரிசிகளைக்‌ கொண்டு முன்னுறச்
செப்பின தேவபரன்‌ இந்தக்‌ காலத்தில்‌
மார்க்கமதாகக்‌ குமாரனைக்‌ கொண்டு
விளக்கின்‌ அன்பை விழைந்து தியானித்துப்‌ -பாடி

2. சொந்த ஜனமான யூதரைத்‌ தள்ளித்‌
தொலையில்‌ கிடந்த புறசாதியாம்‌ எமை
மந்தையில்‌ சேர்த்துப்‌ பராபரன்‌ தம்முடை
மைந்தர்களாக்கின சந்தோஷத்துக்காகப்‌ -பாடி

3. எத்தனை தீர்க்கர்‌, அநேக அப்போஸ்தலர்‌,
எத்தனை போதகர்கள்‌, இரத்தச்‌ சாட்சிகள்‌,
எத்தனை வேண்டுமோ அத்தனையும்‌ தந்திங்‌-கு
இத்தனையாய்க்‌ கிருபை வைத்த நம்‌ கர்த்தனைப்‌ - பாடி

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps