இயேசு என்னும் இனிய நாமம்

இயேசு என்னும் இனிய நாமம்
இந்தக் காசினியோர் அறிய நாமும்
சுவிசேஷத்தைப் பாரினிலே காட்டுவோம்
விசுவாசமதை நாட்டில் நிலை நாட்டுவோம்

சரணங்கள்

1. பாவத்தைப் போக்க சாபதா்தை நீக்க
பக்தராய் வந்தார், பரிசுத்தராய் வந்தார் - இயேசு

2. நிந்தை சுமந்து கந்தை அணிந்து
விந்தையாகவே அவர் சொந்தமாய் வந்தார்- இயேசு

3. ஆதிபன் மேன்மை அத்தனையும் வெறுத்து
ஆயர் அறிய அவர் ஆகுடில் வந்தார்- இயேசு

4. மாட்சி கெடாத மாது மரியின்
பாலனாய் வந்தார் அனு கூலனாய் வந்தார் - இயேசு

5. வேதாளப் பேயைப் பாதாளம் வரையில்
ஒழிக்க வந்தார் அதை அழிக்க வந்தார் - இயேசு

6. பரிசுத்தவான்கள் பருகிக் கழிக்க
இகத்தில் வந்தார் அவர் அகத்தில் வந்தார் - இயேசு

7. வாதை நோய் துன்பம் யாவையும் நீக்க
கர்த்தராய் வந்தார் தம்மைத் தத்தமாய்த் தந்தார்- இயேசு

Start Downloading Your Apps