எந்தன் பூமானைக்காண

எந்தன் பூமானைக்காண சிந்தை பெருகுதையோ
என்றைக்குக் காண்பேனோ

1. சுந்தரத்தில் மிகுந்து அந்தரத்திலிருக்கும்
எந்தன் பூமானைக் காண - அழகுடைய
அண்ணல் இயேசுவைக் காண- எந்தன்

2. விண்ணிலிருந்தவர் மண்ணின் மேல் வந்தவர்
கன்னிகையில் பிறந்தவர் - லாசருக்காக
கண்ணீரை விட்டழுதவர் - எந்தன்

3. இன்னும் வர என்ன தாமதம் செல்லுமோ
சொன்ன வாக்கை நினைத்து - அடியேனுந்தன்
பாதம் பணிந்து வந்தேன் - எந்தன்

4. பொல்லாதோரை இரட்சிக்க வல்ல பராபரன்
என்ன துயரடைந்தார் - அதை நினைத்தால்
சொல்ல முடியுதில்லை- எந்தன்

5. கன்னத்தில் அடிபட்டுக் கண்ணீர் விடும் வேளை
என்னை நினைத்தீரோ நீர் - அதை நினைத்தால்
உம்மை மறப்பேனோ நான்- எந்தன்

Start Downloading Your Apps