ஜீவனே நித்திய ஜீவனே

ஜீவனே, நித்திய ஜீவனே!
ஜீவனே, பரமானந்த திவ்ய பாலகனாகவந்த
ஜீவனே, நித்திய ஜீவனே!

காவ தில்‌ விளைந்த ஆதி ஏவை வினைதீரவந்த - ஜீவனே

சரணங்கள்‌

1. வல்லமைத்‌ திரித்துவ தேவன்‌, சொல்லரும்‌ கிருபைப்‌ பிரதாபன்‌
துல்லிபத்தின்‌ ஞான தீபன்‌, நல்லவர்க்கருள்‌ தயாபன்‌
அல்லிருள்‌ போதே-அடர்‌-புல்லதின்‌ மீதே-வரல்‌
ஆன வான மோன ஞான நேசமே! - ஜீவனே

2. நித்திய கிருபைப்‌ பிரகாசன்‌, அத்தனார்க்‌ கொரே குமரேசன்,
சத்திய வேதத்தின்‌ வாசன்‌, ஸ்துத்திய மிகுஞ்‌ சருவேசன்‌,
சித்திரச்‌ சுதனே,-திரி-தத்வ அற்புதனே,-பர
தேசு லாச நேச மேசியா வேந்தே! - ஜீவனே

3. வானத்தைப்‌ படைத்த கர்த்தர்‌, ஞானத்தை உடைத்த நித்தர்‌
மேன்மை தேவத்துவ பரிசுத்தர்‌, கானத்துற்றெமைக்கரிசித்தர்‌,
மட்டளவற்றோர்‌,-மாட்டுக்‌-கொட்டிலுற்றோர்‌-இன்று
வாழ்த்தி, ஏற்றி, போற்றி, ஸ்தோத்திரஞ்‌ சொல்வோம்‌. - ஜீவனே

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps