எழும்பு சீயோனே இயேசு

எழும்பு சீயோனே! இயேசு இதோ வருகிறார்

1. இயேசுவின் வருகை மிக சமீபமாகுதே - இனி
மோசந்தான் அசதியாக ஜீவித்துவந்தால் - பின்பு
அலறிடுவாயே இயேசு கைவிடும்போது- வேகம்

2. பூலோக நேசம் உன்னில் சற்றும் வேண்டாமே
மேலோகம் பார்த்துப் பார்த்து லோகத்தை வெறு - இது
மாயலோகமே உன்னை மோசம் போக்குமே- வேகம்

3. பாவங்கள் இருதயத்தில் ஏதேனுண்டோ - சிறு
பாரங்கள் உன்னைக்கீழே தள்ளிவிடுமோ - உந்தன்
இருதயத்தை நீ பரிசுத்தமாக்காயோ? - வேகம்

4. லௌகீக கவலையோடு பெருந்தீனியும் - வெறு
மாமிச சுபாவத்தோடு நான் என்பதுமே - உனை
மோசம் போக்குமே உந்தன் ஆசை அழியுமே! - வேகம்

5. மேகத்தில் இயேசுராஜன் வேகம் வரவே - பரம்
ஏறுவார் பரிசுத்தர் வேறு ரூபமாய் - அன்று
மேகமேறிட நீயும் ஆயத்தந்தானா - வேகம்

6. ஆகாயத்தில் நடக்கும் கல்யாணத்திலே - சுத்தர்
பாடுவார் அல்லேலூயா செட்டை அடித்து - அப்போ
அங்கிருப்பாயோ பூவில் ஓடி ஒளிப்பாயோ? - வேகம்

7. அந்திக் கிறிஸ்து அரசாட்சி செய்யும் வேளையில் - கோப
அக்கினி பூமியில் சொரியும் வேளையில் - நீயும்
அகப்படாமலே இன்று தப்பிக்கொள்வாயோ - வேகம்

Start Downloading Your Apps