யேசு ராசா எனை ஆளும்‌ நேசா

யேசு ராசா,-எனை-ஆளும்‌ நேசா!

சரணங்கள்‌

1. மாசிலா மணி ஆன முச்சுடர்‌
மேசியா அரசே,-மனு
வேலே, மாமறை நூலே, தேவ செங்‌
கோலே, இங்கெனின்‌ மேலே அன்பு செய்‌. - யேசு

2. தாவீ தரசன்‌ மைந்தா,-நின்‌
சரணம்‌, சரணம்‌, எந்தா!-சதா
னந்தா வா னந்தா, உ
வந்தாள்‌ மிக வந்தனம்‌, வந்தனம்‌! - யேசு

3. ஐயா, என்‌ மனம்‌ ஆற்றி,-உன
தடிமை என்றெனைத்‌ தேற்றிக்‌,-குண
மாக்கி, வினை நீக்கிக்‌, கை
தூக்கி, மெய்ப்‌ பாக்கியம்‌ கொடு. - யேசு

4. சுத்த திரித்துவ வஸ்துவே,-சுவி
சேட மகத்துவ கிறிஸ்துவே,-பரி
சுத்தனே, கரி சித்தெனை இ
ரட்சித்‌ தடிமைகொள்‌; நித்தியம்‌ தோத்திரம்‌! - யேசு

5. மங்களம்‌ ஈசாவே,-வளம்‌ மிகும்‌
சங்கையின்‌ ராசாவே,-நரர்‌
வாழ்வே, மன்‌ னாவே, மெய்த்‌
தேவே, உமக்‌ கோசன்னாவே. - யேசு

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps