ஏசையா, பிளந்த ஆதி மலையே

ஏசையா, பிளந்த ஆதி மலையே,
மோச நாளில் உன்னில் ஒளிப்பேனே

சரணங்கள்

மோசமுள்ள பாவ நோய் முழுதும் என்னில் தீர், ஐயா
தோஷம் நீக்கும் இரு மருந்தாமே-சொரிந்த உதிரம் நீருமே - ஏசையா

2. இகத்தில் என்னென் செய்தாலும் ஏற்காதே உன் நீதிக்கு,
மிகவாய் தொந்தழுதும் தீராதே - மீளாப்பாவ ரோகமே - ஏசையா

3. பேரறம் அருந்தவம் பெரு மிதமாய்ச் செய்திடினும்
நேரஸ்தரின் பாவம் நீங்குமோ? நீங்காதே உன்னாலல்லால் - ஏசையா

4. வெறுங்கையோடோடி வந்து, வினை நாசன் பேரருள் கெஞ்சி
திருச்சிலுவை தஞ்சம் புகுந்து - தியங்கி அணைத்தே நிற்பேன் - ஏசையா

5. அருளிலிருகோன் ஆனாலும், அபயமுன் தன் நீதிக்கே!
கருணை ஊற்றிக் கழுவமாட்டாயோ? - கழுவாயாகிற் சாவேனே - ஏசையா

6. ஜீவனோடே தங்கினாலும், தெளிகண் சாவில் மங்கிலும்
தேவாசனமும் அஞ்சி நிற்க, தேவலோக மேறிலும் - ஏசையா

Start Downloading Your Apps