ஆரணத்‌ திரித்துவமே எமை

ஆரணதி திரித்துவமே,-எமை
ஆண்டருள்‌, மகத்துவமே.

பூரண தேவ பிதா, சுதன்‌, ஆவியே,
பொன்னுலகத்தெழும்‌ உன்னதமான
போத க்ருபையா பத்ததி நீதிச்‌ சுடரே, நித்திய -ஆரண

சரணங்கள்‌

1. அன்றன்றை அப்பத்தைத்‌ தாரும்‌;-எங்கள்‌
ஆபத்‌ தனைத்தையும்‌ தீரும்‌;
இன்றும்‌ என்றெங்களைச்‌ சேரும்‌;-திரு
இரக்கத்தால்‌ முகம்‌ பாரும்‌;
நன்றி கெட்டோர்களைக்‌ கொன்று போடாதேயும்‌;
நம்பரா, கருணாம்பரா,
ஞானத்‌ தனு மானத்தொளிர்‌
மேன்மை திவ்விய பானத்தருள்‌. - ஆரண

2. மூவர்‌ ஒன்றான யெகோவா,-உயர்‌
(முக்ய கிருபையின்‌ தேவா,
மேவி அடியாரைத்‌ தேவா,-பல
வெவ்வினையினின்றும்‌ கா, வா;
பாவிகள்‌ நாங்கள்‌ ஏவையின்‌ மக்களே,
பக்ஷமே', பரம பொக்ஷமே,
பாடும்புகழ்‌ நாடும்பரி
வோடும்‌ தயை நீடும்பரா! - ஆரண

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps