மன்னுயிர்க்காகத்‌ தன்னுயிர்

மன்னுயிர்க்காகத்‌ தன்னுயிர்‌ விடுக்க
வல்ல பராபரன்‌ வந்தார்‌, வந்தார்‌. -பாரில்‌

2. இந்நிலம்‌ புரக்க, உன்னதத்‌ திருந்தே
ஏகபராபரன்‌ வந்தார்‌, வந்தார்‌. -பாரில்‌

3. வானவர்‌ பணியுஞ்‌ சேனையின்‌ கருத்தர்‌,
மகிமைப்‌ பராபரன்‌ வந்தார்‌, வந்தார்‌. -பாரில்‌

4. நித்திய பிதாவின்‌ நேய குமாரன்‌
நேமி அனைத்தும்‌ வாழ வந்தார்‌, வந்தார்‌. “பாரில்‌

5. மெய்யான தேவன்‌, மெய்யான மனுடன்‌,
மேசியா, ஏசையா, வந்தார்‌, வந்தார்‌. -பாரில்‌

6. தீவினை நாசர்‌, பாவிகள்‌ நேசர்‌,
தேவ கிறிஸ்தையா வந்தார்‌, வந்தார்‌. -பாரில்‌

7. ஜெய அனுகூலர்‌, திவ்விய பாலர்‌
திரு மனுவேலனே வந்தார்‌, வந்தார்‌. -பாரில்‌

- வே. சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps