நீர் திவ்விய வழி இயேசுவே

1. நீர் திவ்விய வழி, இயேசுவே,
நீர் பாவநாசர்தாம்;
பிதாவிடத்தில் சேர்வதும்
உமது மூலமாம்.

2. நீர் திவ்விய சத்தியம், இயேசுவே,
உம் வாக்கு ஞானமாம்;
என் நெஞ்சில் அதின் ஜோதியால்
பிரகாசமும் உண்டாம்.

3. நீர் திவ்விய ஜீவன், இயேசுவே,
வெம் சாவை ஜெயித்தீர்;
உம்மைப் பின்பற்றும் யாவர்க்கும்
சாகாமை ஈகுவீர்.

4. நீர் வழி, சத்தியம், ஜீவனும்;
அவ்வழி செல்லவும்,
சத்தியம் பற்றி, ஜீவனை
அடையவும் செய்யும்.

Start Downloading Your Apps