மேலோகத்தாரே புகழ்ந்து

1. மேலோகத்தாரே புகழ்ந்து போற்றி
சாலோசையாய்த் துதித்துப் பாடுங்கள்
ஓயாத அல்லேலூயா!

2 ஓயா ஒளிமுன் நிற்கும் சேனையே
ஆர்ப்பரித்து ஒய்யார தொனியாய்
ஓயாத அல்லேலூயா!

3 மாட்சிமையான பாடல் தொனிக்கும்
ஆட்சி செய்யும் ராஜாவை வாழ்த்திடும்
ஓயாத அல்லேலூயா!

4 கிறிஸ்துவின் முன் ஓசை எழும்பும்
சதா காலமும் புகழ் மகிமை
ஓயாத அல்லேலூயா!

Start Downloading Your Apps