இம்மானுவேலின் இரத்தத்தால்

1. இம்மானுவேலின் இரத்தத்தால்
நிறைந்த ஊற்றுண்டே;
எப்பாவத் தீங்கும் அதனால்
நிவிர்த்தியாகுமே

2. மா பாவியான கள்ளனும்
அவ்வூற்றில் மூழ்கினான்;
மன்னிப்பும் மோக்ஷானந்தமும்
அடைந்து பூரித்தான்.

3. அவ்வாறு நானும் இயேசுவால்
விமோசனம் பெற்றேன்;
என் பாவம் நீங்கிப் போனதால்
ஓயாமல் பாடுவேன்.

4. காயத்தில் ஓடும் ரத்தத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்;
ஒப்பற்ற மீட்பர் நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன்

5. விண் வீட்டில் வல்ல நாதரை
நான் கண்டு பூரிப்பேன்;
என்தனை மீட்ட நேசத்தைக்
கொண்டாடிப் போற்றுவேன்.

Start Downloading Your Apps