சுத்த ஆவீ என்னில் தங்கும்

1. சுத்த ஆவீ, என்னில் தங்கும்,
நானும் சுத்தன் ஆகவே;
பாவ அழுக்கெல்லாம் நீக்கும்
உம் ஆலயமாகவே
என்னை நீர் சிங்காரியும்
வாசம் பண்ணும் நித்தமும்.

2. சத்திய ஆவீ, என்னில் தங்கும்
நானும் சத்தியன் ஆகவே;
தெய்வ பக்தி என்னில் முற்றும்
வளர்ந்தேறச் செய்யுமே;
நீர் என்னில் பிரவேசியும்
ஆண்டுகொள்ளும் நித்தமும்.

3. நேச ஆவீ, என்னில் தங்கும்,
நானும் நேசன் ஆகவே;
துர்ச் சுபாவம் போகப் பண்ணும்;
அன்பில் நான் வேரூன்றவே
அன்பின் ஸ்வாலை எழுப்பும்,
மென் மேலும் வளர்த்திடும்.

4. வல்ல ஆவீ, என்னில் தங்கும்,
நானும் வல்லோன் ஆகவே;
சாத்தான் என்னைத் தூண்டிவிடும்
போது ஜெயங்கொள்ளவே
நீர் என் பக்கத்தில் இரும்,
என்னைப் பலப்படுத்தும்.

5. நல்ல ஆவீ, என்னில் தங்கும்,
நானும் நல்லோன் ஆகவே;
பகை, மேட்டிமை, விரோதம்,
மற்றும் தீமை யாவுமே
என்னை விட்டகற்றுமேன்,
என்னைச் சீர்ப்படுத்துமேன்.

6. தெய்வ ஆவீ, என்னில் தங்கும்,
நானும் உம்மில் தங்கவே;
மோட்ச பாதையில் நடத்தும்,
இயேசுவின் முகத்தையே
தெளிவாகக் காண்பியும்;
என்னை முற்றும் ரட்சியும்.

Start Downloading Your Apps