விசுவாசியின்‌ காதில்‌ பட யேசு

விசுவாசியின்‌ காதில்‌ பட, யேசுவென்ற நாமம்‌
விருப்பாயவர்‌ செவியில்‌ தொனி இனிப்பாகுது பாசம்‌.

சரணங்கள்‌

1. பசித்த ஆத்துமாவைப்‌ பசியாற்று மன்னாவதுவே;
முசிப்பாறுதல்‌' இளைத்தோர்க்கெல்லாம்‌ முற்றும்‌ அந்தப்‌
பெயரே. - விசு

2. துயரையது நீக்கிக்‌ காயமாற்றிக்‌ குணப்படுத்தும்‌;
பயங்கள்‌ யாவும்‌ யேசுவென்றால்‌ பறந்தோடியேபோகும்‌. - விசு

3. காயப்பட்ட இருதயத்தைக்‌ கழுவிச்‌ சுத்தப்படுத்தும்‌,
மாயைகொண்ட நெஞ்சையது மயக்கமின்றிவிடுக்கும்‌ - விசு

4. எல்லை இல்லாக்‌ கிருபைத்திரள்‌ ஏற்றுநிறைந்திருக்கும்‌,
எல்லா நாளும்‌ மாறாச்செல்வம்‌ யேசுவென்ற பெயரே. - விசு

5. என்னாண்டவா, என்‌ ஜீவனே, என்‌ மார்க்கமே, முடிவே,
என்னால்‌ வருந்துதியை நீரே ஏற்றுக்கொள்ளும்‌, தேவே. - விசு

Start Downloading Your Apps