நல் மீட்பரே இந்நேரத்தில்

நல்‌ மீட்பரே, இந்நேரத்தில்‌
வந்தாசீர்வாதம்‌ கூறுமேன்‌;
உம்‌ வார்த்தை கேட்டோர்‌ மனதில்‌
பேரன்பின்‌ அனல்‌ மூட்டுமேன்‌,
வாழ்நாளிலும்‌, சாங்காலத்தும்‌,
ஆ இயேசுவே, பிரகாசியும்‌.

2. இன்றெங்கள்‌ செய்கை யாவையும்‌
தயாபரா, நீர்‌ நோக்கிணீர்‌,
எல்லாரின்‌ பாவம்‌ தவறும்‌,
மா அற்பச்‌ சீரும்‌ அறிந்தீர்‌.
வாழ்நாளிலும்‌, சாங்காலத்தும்‌,
ஆ இயேசுவே , பிரகாசியும்‌.

3. எப்பாவத்‌ தீங்கிலிருந்தும்‌
விமோசனத்தைத்‌ தாருமேன்
உள்ளான சமாதானமும்‌
சுத்தாங்கமும்‌ உண்டாக்குமேன்
வாழ்நாளிலும்‌, சாங்காலத்தும்‌,
ஆ இயேசுவே, பிரகாசியும்‌.

4. சந்தோஷம்‌ பயபக்தியும்‌
நீர்‌ நிறைவாக ஈயுமேன்‌;
உமக்கொப்பாக ஆசிக்கும்‌
தூய்மையாம்‌, உன்ளம்‌ தாருமேன்‌:
வாழ்நாளிலும்‌, சாங்காலத்தும்‌,
ஆ இயேசுவே, பிரகாசியும்‌

5. தரித்திரம்‌ துன்பம்‌ பாவத்தால்‌
இக்கட்டடைந்த யாரையும்‌
கண்ணோக்கும்‌ மா கிருபையால்‌;
நீர்‌ மீட்பர்‌, நீர்‌ சமஸ்தமும்‌
வாழ்நாளிலும்‌, சாங்காலத்தும்‌,
ஆ இயேசுவே, பிரகாசியும்‌.

Start Downloading Your Apps