திருச்சபை காத்திருக்க

1. திருச்சபை காத்திருக்க,
எந்நாள், நாதா, வருவீர்?
எந்நாள் துக்க ரா முடிய
பகல் விடியச் செய்வீர்?
நெல் விளைந்து வாடிப்போக
அறுப்போரும் குறைந்தார்;
சாத்தான் கொள்ளை வைத்துக்கொள்ள
கிறிஸ்து வீணாயோ மாண்டார்?

2. சிஷ்டிக்கெல்லாம் உற்ற செய்தி
கோடாகோடி கேளாரே;
யார்தான் கேட்பார் சொல்வார் இன்றி?
நாதா, வார்த்தை ஈயுமே;
வார்த்தை ஈயும்; சுவிசேஷ
தொனி எங்கும் ஒலித்தும்
எல்லாத் தேசத்தாரும் திவ்விய
மீட்பைக் கேட்கச் செய்திடும்

3. நீர் தெரிந்தோர் ஈறுகாலம்
ஒன்றாய் சேர்க்கப்படுவார்;
சாத்தான் கட்டப்பட்டுப் பாவம்
மாய, கிறிஸ்து ஆளுவார்;
பசி, தாகம், நோவு, சாவும்,
கண்ணீர் யாவும்; நீங்கவே
திருச்சபை காத்திருக்கும்;
இயேசு ஸ்வாமீ, வாருமே.

Start Downloading Your Apps