ஜெபம்‌ மறவாதே நேசனே

ஜெபம்‌ மறவாதே நேசனே-எக்காலமும்‌ நீ!

சரணங்கள்‌

1. ஜெபம்‌ பரமனுடன்‌ பேச்சு;
தேவை யெல்லாம்‌ அத்தா லாச்சு;
தப விசுவாசி மூச்சு;
தகாதெலாம்‌ அத்தால்‌ போச்சு. -ஜெப

2. அம்பரன்‌ கற்பனை நோக்கு;
அவரதருமை வாக்கு;
நம்பிச்‌ சந்தேகம்‌ போக்கு;
நலம்‌ வரத்‌ தீமை நீக்கு. -ஜெப

3. பேயை ஜெபத்தோடு வென்ற,
பிரிய நாமமுங்‌ கொண்ட,
நேய சுதன்தனைத்‌ தந்த,
நின்‌ மலனுக்கே யுகந்த. -ஜெப

4. விசுவாச நேசத்தோடு
மிகும்‌ பக்தியோடு நாடு;
நிச்சயமாய்‌ பரனைத்‌ தேடு;
நேர்மையுடனே ஓடு. -ஜெப

5. பகலுடன்‌ இரவிலும்‌,
பணிவுடன்‌ குறைவிலும்‌,
திகிலிலும்‌ மகிழ்விலும்‌,
செல்வம்‌ வறுமையிலும்‌. -ஜெப

6. தேவ அரசாட்சிக்காக
ஜெபி, உன்றன்‌ குறைபோக,
ஆவலுடன்‌ பிறர்க்காக
அன்புடன்‌ ஜெபிப்பா யாக. -ஜெப

- அருள்திரு. ஞா. சாமுவேல்‌

Start Downloading Your Apps