பக்தருடன்‌ பாடுவேன்‌ பரம

பக்தருடன்‌ பாடுவேன்‌-பரம சபை
முக்தர்‌ குழாம்‌ கூடுவேன்‌.

அன்பால்‌ அணைக்கும்‌ அருள்நாதன்‌ மார்பினில்‌
இன்பம்‌ நுகர்ந்திளைப்பாறுவோர்‌ கூட நான்‌. - பக்த

சரணங்கள்‌

1. அன்பு அழியாதல்லோ அவ்வண்ணமே
அன்பர்‌ என்‌ இன்பர்களும்‌,?
பொன்னடிப்‌ பூமானின்‌ புத்துயிர்‌ பெற்றதால்‌
என்னுடன்‌ தங்குவார்‌ எண்ணூழி காலமாய்‌. - பக்த

2. இகமும்‌ பரமும்‌ ஒன்றே இவ்வடியார்க்‌-கு
அகமும்‌ ஆண்டவன்‌ அடியே,
சுகமும்‌ நற்செல்வமும்‌ சுற்றமும்‌ உற்றமும்‌,
இகலில்லா ரட்சகன்‌ இன்பப்‌ பொற்பாதமே - பக்த

3. தாயின்‌ தயவுடையதாய்த்‌ தமியன்‌ நின்‌
சேயன்‌ கண்‌ மூடுகையில்‌,
பாயொளிப்‌ பசும்‌ பொன்னே, பக்தர்‌ சிந்தாமணி,
தூயா, திருப்பாதத்‌ தரிசனம்‌ தந்தருள்‌. - பக்த

- சவரிராயன்‌ ஏசுதாசன்‌

Start Downloading Your Apps