செய்ய வேண்டியதைச்‌ சீக்கிரம்‌

செய்ய வேண்டியதைச்‌ சீக்கிரம்‌
செய்‌, செய்‌, செய்‌, செய்‌, செய்‌.

சரணங்கள்‌

1. வையகமும்‌ அதன்‌ வாழ்வுகளும்‌ மிக
மகிமை பெருமை பொருளானதுவும்‌
வெய்யவன்‌ கண்ட பனிபோலாம்‌; இது
மெய்‌, மெய்‌, மெய்‌, மெய்‌, மெய்‌. - செய்‌

2. ஆவியும்‌ கூடுவிட்‌ டேகாமுன்‌,
ஆபத்து நாட்கள்‌ வந்துணுகாமுன்‌,
தேவ சுதன்‌ ஜெக ரட்சகரண்டை
சேர்‌, சேர்‌, சேர்‌, சேர்‌, சேர்‌. - செய்‌

3. அவ்வியம்‌ பெருமை அகந்தையும்‌ அசுத்தமும்‌
அகற்றி நீ அனுதினமும்‌
திவ்விய வேதத்‌ தீவர்த்தி ஒளியினில்‌
செல்‌, செல்‌, செல்‌, செல்‌, செல்‌. - செய்‌

4. துர்ச்சன ரோடுற வாகாமல்‌, ஐயன்‌
துய்ய விதி பத்து மீறாமல்‌,
உச்சிதப்‌ பதமருள்‌ யேசுவைப்‌ பணிந்‌-து
உய்‌, உய்‌, உய்‌, உய்‌, உய்‌. - செய்‌

- ஈசாக்கு பாக்கியநாதன்‌

Start Downloading Your Apps