திருப்‌ பாதம்‌ சேராமல்‌ இருப்பேனோ

திருப்‌ பதம்‌ சேராமல்‌ இருப்பேனோ-நான்‌
தெய்வத்தைத்‌ தேடாமல்‌ பிழைப்பேனோ?

சரணங்கள்‌

1. அருட்கடலாம்‌ ஈசன்‌ அடியவர்‌ பாசன்‌!
உருக்கம்‌ நிறைந்த விண்ணுயிரான நேசன்‌! - திரு

2. ஆவியும்‌ ஆத்மமும்‌ ஆண்டவர்‌ பங்கே,
பூவில்‌ அவரல்லால்‌ புகலிடம்‌ எங்கே? - திரு

3. சத்திய மார்க்கமும்‌ சகலமுமான
நித்திய ஜீவனும்‌ நிமலனுமான. - திரு

4. ஆறுதல்‌, தேறுதல்‌ அளித்திடும்‌ சேயன்‌,
கூறு மகிமையில்‌ சேர்த்திடும்‌ தூயன்‌. - திரு

5. உலையில்‌ மெழுகு போல்‌ உருகுதென்‌ நெஞ்சம்‌
மலையா'துன்‌ திருவடி வணங்கினேன்‌ தஞ்சம்‌. - திரு

அருள்திரு. சா. பரமானந்தம்‌

Start Downloading Your Apps