புத்தியாய்‌ நடந்து வாருங்கள்‌

புத்தியாய்‌ நடந்து வாருங்கள்‌;-திரு வசனப்‌
பூட்டைத்‌ திறந்து பாருங்கள்‌.

சத்தியத்தைப்‌ பற்றிக்கொண்டு,
தன்னைச்‌ சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும்‌ ஜெபம்‌, தருமம்‌,
நீதி செய்து, பாடிக்கொண்டு - புத்தி

சரணங்கள்‌

1. ஆருடைய பிள்ளைகள்‌ நீங்கள்‌?-திரு உரையில்‌
அறிந்து உணர்ந்து பாருங்கள்‌;
சீருடைய தெய்வப்‌ பிள்ளைகள்‌-நீங்கள்‌; ஏதிந்த
தித்தரிப்பு செய்யும்‌ வகைகள்‌?
கூருடன்‌ மெய்த்‌ திருமறை குறித்துச்‌ சொல்வதைத்‌ தினம்‌
நேருடன்‌ ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில்‌ தானே - புத்தி

2. ஆவியை அடக்காதிருங்கள்‌-மறை சொல்லுவதை
அசட்டை செய்யாமல்‌ பாருங்கள்‌;
ஜீவனை அடையத்‌ தேடுங்கள்‌;-யேசுக்‌ கிறிஸ்தின்‌
சிந்தையைத்‌ தரித்துக்‌ கொள்ளுங்கள்‌;
மேவியே ஜெபம்‌, மன்றாட்டு, விண்ணப்பம்‌ வேண்டுதலோடு
தாவி, யேசுவைப்‌ பிடித்துத்‌, தளரா நடையோ டுன்னிப்‌ - புத்தி

3. ஏசுக்‌ கிறிஸ்தையன்‌ பதத்தைத்‌-துதித்துப்‌ போற்றி,
இன்பமாய்ச்‌ சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து, நலத்தைப்‌-பிடித்துளத்தில்‌
வைத்துக்கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல்‌ பகைத்துங்கள்‌ நித்திய ரட்சிப்பைத்‌ தினம்‌
ஆசையோடு தேடி, நீங்கள்‌ அடையும்படி முற்றிலும்‌ - புத்தி

4. பரிசுத்த கூட்டம்‌ அல்லவோ?-நீங்கள்‌ எல்லாரும்‌
பரன்‌ மகன்‌ தேட்டம்‌ அல்லவோ?
தரிசிக்க நாட்டம்‌ அல்லவோ?-கிறிஸ்தின்‌ உள்ளம்‌
தன்னிலே கொண்டாட்டம்‌ அல்லவோ?
பரிசனை செய்தவர்பொற்‌ பாதத்தை மனதில்‌ உன்னிக்‌,
கரிசனை யோடு தேடிக்‌, காணத்‌ தீயோன்‌ நாணப்‌ படிப்‌ - புத்தி

- மரியான்‌ உபதேசியார்‌

Start Downloading Your Apps