சிலுவைதனில் உயிர்பிரிய

1. சிலுவைதனில் உயிர்பிரிய திருமகனார் முகநோக்கி
தேவ அன்னையும் கூவி அழுதாள் வெகுவாய் ஆ! ஆ!

2. உலகமதில் இருசேரார் நடுவாக மரமீதில்
உறங்குவதும் சுகமாச்சுதோ - மகனே ஆ! ஆ!

3. ஐயாயிரர் பசியை அமர்த்தி அரவணைத்த
அருட்கை அயர்ந்து சோர்ந்ததுவோ - மகனே ஆ! ஆ!

4. பல பல பேர் அவமாக பகடியோடு பாராட்ட
பாங்குதனில் நித்திரையானீரோ - மகனே ஆ! ஆ!

5. ஆங்குமுன் சொற்படி சோர்வை எல்லாம் திரண்டு
அம்புவியால் வெம்பினேனே - மகனே ஆ! ஆ!

Start Downloading Your Apps