போற்றுவோமே போற்றுவோமே

போற்றுவோமே போற்றுவோமே
எம் தேவரீரை இவ்வேளையிலே நன்றியுடனே

1. துங்கன் யேசுவே தூயா உமக்கே
துதிகள் சாற்றிடுவேன்
மங்கா புகழும் மகிழ்ந்துபோற்றி
எங்கும் துதித்திடுவேன்
கங்குல் அற எங்குமே ஒளி
மங்கிடாமலே தங்கிட வேணும் - போற்றுவோமே

2. ஆழ்ந்த சேற்றினில் அமிழ்ந்த எம்மையே
அணைத்து எடுத்தோனே
ஆழிதன்னில் எம் பாவம் எறிந்த
அன்னை உத்தமனே
அன்றும் என்றும் என்றும் துதிப்பேன்
மன்னவனையே மண்ணிதினிலே - போற்றுவோமே

3. பாவம் போக்கியே கோபம் மாற்றியே
ரோகம் தொலைத்தோனே
துரோகி என்னையே சுத்திகரித்த
தூய வேந்தனே
தூயா நேயா காயமாற்றியே
கருணாநிதியே பரிகாரியே- போற்றுவோமே

4. பாரில் என்னையே பிரித்தெடுத்தோனே
தாவி வந்தோனே
அகமதினிலே ஆவி ஈந்திட
அருள் நிறைந்தவனே
தரிசனம் தந்த தேவனே
பரிசுத்தமாய் பாரில் ஜீவிக்க- போற்றுவோமே

5. பூரணர் ஆகவே பூவில் வாழ்ந்திட
கிருபை அளித்தோனே
புகழை விரும்பேன் மகிழ்வேன் தினமே
மகிமை செலுத்திடுவேன்
கோனே தேனே கோதில்லாதோனே
கானம் பாடியே துதித்திடுவேன் - போற்றுவோமே

Start Downloading Your Apps