பாவங்கள் போக்கவே சாபங்கள்

பாவங்கள் போக்கவே
சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரையா
மனிதனை மீட்கவே
பரலோகம் திறக்கவே
சிலுவையைச் சுமந்தாரையா

கண்ணீரைத் துடைத்தாரையா
சந்தோஷம் தந்தாரையா - ( 2) - எந்தன் இயேசுவே - 4

தங்கத்தைக் கேட்கவில்லை வைரத்தைக் கேட்கவில்லை
உள்ளத்தைக் கேட்டாரையா
ஆஸ்தியைக் கேட்கவில்லை அந்தஸ்தைக் கேட்கவில்லை
உள்ளத்தைக் கேட்டாரையா

நான் தேடிப் போகவில்லை
என்னைத் தேடி வந்தாரையா - (2)- எந்தன் இயேசுவே - (4)

தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பன் உன்னை மறந்தாலும் உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்

கரம் பிடித்து நடத்திடுவார்
கன்மலை மேல் நிறுத்திடுவார் - (2) - எந்தன் இயேசுவே - (4)

Start Downloading Your Apps