அல்லேலூயா (3) ஆ

1. அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா!
ஆ மாந்தரே, நாம் பாடுவோம்
இந்நாளில் சாவை வென்றோராம்
விண் மாட்சி வேந்தர் போற்றுவோம்
அல்லேலூயா!

2. அஞ்ஞாயிறு அதிகாலை
நல் மாதர் மூவர் கல்லறை
சென்றாரே காண தேகத்தை

3. அம்மூவர் பார்த்தார் தூதன்தான்;
வெண் ஆடை தூதன் சொல்லுவான்;
'நாதர் கலிலேயா செல்வார்'!

4. பயந்த சீஷர் ராவிலே
கண்டார் கேட்டார் தம் நாதரே!
'என் சமாதானம், தாசரே!'

5. 'உயிர்த்த நாதர் கண்டோமே'
என்றோரைத் தோமா கேட்டானே
நம்பான், சந்தேகங் கொண்டானே;

6. 'வா, தோமா, என் விலாவைப் பார்
இதோ, என் கைகள் கால்கள் பார்,
நம்பு, சந்தேகம் தீர்' என்பார்.

7. தோமா சந்தேகம் தீர்ந்தனன்,
விலா, கை, கால்கள் நோக்கினன்,
என் நாதா! ஸ்வாமி! என்றனன்.

8. காணாமல் நம்பின பாக்கியர்;
மாறா விஸ்வாசம் வைப்பவர்,
மா நித்திய ஜீவன் பெறுவர்.

9. மா தூயதாம் இந்நாளில் நாம்
நம் பாடல் ஸ்தோத்ரம் படைப்போம்;
பரனைப் போற்றி மகிழ்வோம்
அல்லேலூயா!

Start Downloading Your Apps