தாரகமே பசிதாகத்துடன்‌ உம்மிடம்‌

தாரகமே,-பசிதாகத்துடன்‌ உம்மிடம்‌
வேகத்துடனே வாரேன்‌.

சீருஞ்‌ செல்வமும்‌ பெற்றுத்‌ தேறும்படிக்‌ கென்னிடம்‌
சேரும்‌ யாரையும்‌ ஒருபோதுந்‌ தள்ளிடே னென்றீர்‌. - தாரகமே

சரணங்கள்‌

1. பாவமகலத்‌ தேவ கோபமது ஒழியப்‌
பாடுபட்டுயிர்‌ விடுத்தீர்‌;-பின்னும்‌
ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்‌
சிலுவைதனிலே பகுத்தீர்‌;
மேவியெனை நெருக்கித்‌ தாவும்‌ பவத்தைக்‌ கொன்று,
சேவித்‌ துயிர்பிழைக்க, தேவே, உமையுட்‌ கொள்ள. - தாரகமே

2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப்‌ போகாமல்‌ அதை
கண்டுபிடித்தி ரட்சித்தீர்‌;- அது
பேணுதலுடன்‌ பரி பூரண மடைந்திடப்‌
பேருல குதித்தேனென்றீர்‌;
வேணுமுமது நீதி பூண, நிறைவா யுன்றன்‌
மாணருளுந்‌ திருப்தியானே பெற உம்மிடம்‌. - தாரகமே

3. தந்த திருவசனம்‌ உந்தம்‌ இராப்போசனம்‌
தகமை எத்தனமாமே;-யான்‌
சிந்தை பணிந்தவற்றை என்றன்‌ மனதுட்கொள்ளத்‌
தேவசுத்தாவி தாமே;
உந்தம்‌ தசையுதிர! விந்தை விருந்தினை யான்‌
சந்ததமுண்டு துதி சாற்ற அருள்‌ செய்வீரே! - தாரகமே

- அருள்திரு. வே. மாசிலாமணி

Start Downloading Your Apps