எந்நாளு மேதுதிப்பாய்‌

எந்நாளு மேதுதிப்பாய்‌-என்னாத்துமாவே, நீ
எந்நாளு மேதுதிப்பாய்‌!

இந்நாள்‌ வரையிலே உன்னதனார்‌ செய்த
எண்ணில்லா நன்மைகள்‌ யாவு மறவாது. - எந்நாளுமே

சரணங்கள்‌

1. பாவங்கள்‌ எத்தனையோ,-நினையா திருத்தாருன்‌
பாவங்கள்‌ எத்தனையோ?
பாழான நோயை அகற்றிக்‌ குணமாக்கிப்‌
பாரினில்‌ வைத்த மகா தவ வைஎண்ணி - எந்நாளுமே

2. எத்தனையோ கிருபை,-உன்னுயிர்க்குச்‌ செய்தாரே,
எத்தனையோ கிருபை?
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நேயமதாக ஜீவனை மீட்டதால்‌. - எந்நாளுமே

3. நன்மையாலுன்‌ வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய்‌
நன்மையாலுன்‌ வாயை;
உன்வயது கழுகைப்போல்‌ பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோ லாகவே செய்ததால்‌, - எந்நாளுமே

4. பூமிக்கும்‌ வானத்துக்கும்‌-உள்ள தூரம்‌ போலவே,
பூமிக்கும்‌ வானத்துக்கும்‌,
சாமி பயமுள்ளவர்‌ மேல்‌ அவர்‌ அருள்‌
சாலவும்‌ தங்குமே, சத்திய மேயிது. - எந்நாளுமே

5. மன்னிப்பு மாட்சிமையாம்‌-மாதேவனருளும்‌
மன்னிப்பு மாட்சிமையாம்‌;
எண்ணுவாயோ கிழக்கு மேற்கின்‌ தூரமே?
எண்ணில்‌ உன்பாவம்‌ அகன்றதத்தூரமே. - எந்நாளுமே

6. தந்தைதன்‌ பிள்ளைகட்கு-தயவோ டிரங்கானோ
தந்தை தன்‌ பிள்ளைகட்கு?
எந்த வேளையும்‌ அவரோடு தங்கினால்‌,
சொந்தம்‌ பாராட்டியே தூக்கிச்‌ சுமப்பாரே; - எந்நாளுமே

- அருள்திரு. சா. பரமானந்தம்‌

Start Downloading Your Apps