சோர்ந்து போகாதே மனமே

சோர்ந்து போகாதே மனமே
சோர்ந்து போகாதே போராட
சோர்ந்து போகாதே

அனுபல்லவி

கண்டுனை அழைத்த தேவன் கைவிடுவாரோ - சோர்ந்து

சரணங்கள்

1. வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு
ஊக்கமான ஆவி உன்னைத் தாங்க மன்றாடு- சோர்ந்து

2. துன்பங்கள் தொல்லைகள் உன்னைச் சூழ்ந்து கொண்டாலும்
அன்பர் உன்னைத் தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ- சோர்ந்து

3. சோதனைகளை ஜெயிப்பேன் பாக்கியவானல்லோ
ஜீவகிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்- சோர்ந்து

Start Downloading Your Apps