மெய்ச் சமாதானமா துர்

1. மெய்ச் சமாதானமா துர் உலகில்?
ஆம், இயேசு ரத்தம் பாயும் நெஞ்சினில்.

2. மெய்ச் சமாதானமா பல் தொல்லையில்?
ஆம், இயேசு சித்தத்தை நாம் செய்கையில்.

3. மெய்ச் சமாதானமா சூழ் துக்கத்தில்?
ஆம், இயேசு சீர் அமர்ந்த நெஞ்சத்தில்.

4. மெய்ச் சமாதானமா உற்றார் நீங்கில்?
ஆம், இயேசு கரம் நம்மைக் காக்கையில்.

5. மெய்ச் சமாதானமா சிற்றறிவில்?
ஆம், இயேசு ராஜன் என்று அறிகில்.

6. மெய்ச் சமாதானமா சா நிழலில்?
ஆம், இயேசு சாவை வென்றிருக்கையில்.

7. பூலோகத் துன்பம் ஒழிந்த பின்னர்,
இயேசு மெய்ச் சமாதானம் அருள்வார்.

Start Downloading Your Apps