கொந்தளிக்கும் லோக வாழ்வில்

1. கொந்தளிக்கும் லோக வாழ்வில்
கேட்போம் மீட்பர் சத்தத்தை;
நித்தம் நித்தம் மா அன்போடு,
‘நேசா! பின் செல்வாய் என்னை.’

2. பூர்வ சீஷன் அந்திரேயா
கேட்டான் அந்த சத்தமே!
வீடு, வேலை, இனம் யாவும்
விட்டான் அவர்க்காகவே.

3. மண் பொன் மாய லோக வாழ்வை
விட்டு நீங்க அழைப்பார்;
பற்று பாசம் யாவும் தள்ளி,
‘என்னை நேசிப்பாய்’ என்பார்.

4. இன்பம், துன்பம், கஷ்டம் சோர்வு
வேலை, தொல்லை, ஓய்விலும்,
யாவின் மேலாய்த் தம்மைச் சார
நம்மை அழைப்பார் இன்றும்.

5. மீட்பரே, உம் சத்தம் கேட்டு,
கீழ்ப்படிய அருளும்;
முற்றும் உம்மில் அன்பு வைத்து
என்றும் சேவிக்கச் செய்யும்.

Start Downloading Your Apps